Saran's 2020 Hero

Saran Raj says: "இந்த கொரோனா நோய் தொற்றின் காரணத்தால் உலகமே முடங்கிப்போன, பல நெருக்கடியான அந்த காலகட்டத்தில் பாதிக்கப்படாதவர்களே இருக்க முடியாது.
இதில் நான் விதி விலக்கல்ல. ஆரம்பத்தில் நான் மீளமுடியாத மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். இதிலிருந்து என்னை மீட்க பல வழிகளில் போராடினேன். முடியவில்லை. எனது விட்டிற்கு அருகில் உள்ள குழந்தை பட்டாளமும் அதில் மாயி என்ற மூன்று வயது சிறுவன்தான் என்னை மீட்டார்கள். இந்த சிறுவர்களுக்கு ஊரடங்கு, கொரோனா மனவுளைச்சல் இப்படி எதைப்பற்றியும் தெரியாது. அதுகுறித்து எந்த அக்கரையும் இல்லை. அது அவர்களுக்கு அவசியமுமில்லை. தினமும் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை விளையாட்டுதான். யாரையும் பொருட்படுத்துவதில்லை. எதற்காகவும் சோர்ந்து போனதில்லை. எப்பொழுதும் துறுதுறு வென்று ஓடிக்கொண்டே இருப்பான் இந்த மாயி. எனக்கு அந்த சமயத்தில் இவர்களின் மனநிலைதான் தேவைப்பட்டது. எவே இவனிடமும், இவன் கூட்டத்திடமும் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இரண்டு மாதங்கள் போராடினேன். பயபுள்ளைகள், சேர்த்து கொள்ளவேயில்லை. ஒரு நாள் மாயி-ன் தந்தை ஒரு புதிய சைக்கிளை வாங்கி கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் அவனை அந்த சைக்கிளுடன் பல புகைப்படங்களை எடுத்து, அவனிடம் காட்டினேன். பயபுள்ளைக்கு பயங்கர சந்தோஷம். அவன் தந்தை, அவன் கண் முன்னே சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தியபோது அடைந்த சந்தோஷத்தை விட, சைக்கிள் மேல் அவன் உட்கார்ந்திருக்கும் காட்சியை பார்த்த போது அவன் கண்களில் ஆயிரம் பட்டாம்பூச்சியை பார்க்க முடிந்தது. அப்பொழுது, இதான் சமயம் என அவனிடம் "உன் சைக்கிள்' ல என்னையும் ஏத்திக்கிறியாடா..?" என்று கேட்டேன். அதற்கு அவன் "றே....றிக்க" என்று அவனுக்கே உரிய மழலை மொழியில் கூறினான்.
அன்று முதல் நானும் அவனும் நட்பானோம். இரவு 8:00 மணிக்குள் தூங்கி விடுவான் என்பதால் அதிகாலை 5:30 கெல்லாம் எழுந்து விடுவான். எழுந்தவுடன் ஒரு டம்ளர் நிறைய காபியையும், குட் டே பிஸ்கட்டும் அவன் அம்மா கொடுத்துவிடுவார். அதையெல்லாம் முடித்தவுடன் நேரா.. என் வீடு நோக்கி வந்து "ப்பா.. பாஆஆ. த்துட்டிக்கு ப்போ..ஓ" என பலமுறை கூறி என்னை எழுப்புவான்.
அவன் வீட்டுக்கு அருகில் எனது வீடு இருப்பது அவனுக்கு வசதியாக போச்சு.
இப்படி தினமும் இவனுடன் பல மணி நேரம் கழிக்க இவன் வாய்ப்பளித்ததாலயே, எனக்கிருந்த பல நெருக்கடியை கடந்து, நான் என்னை மீட்டுக் கொண்டேன் என்பதை விட இவன் என்னை மீட்டுக்கொண்டான்."