Lalitha's 2020 Hero is Susila Sriram

Lalitha says: "-திருமதி. சசிகலா ஸ்ரீராம் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி பிற்படுத்தப்பட்டவர் களுக்காக நடத்தப்படும் சுயநிதி இலவச பள்ளி. எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறை கற்பவர்கள் ஆவர். அவர்கள் படிப்பதற்கு அவர்கள் வீட்டில் இருப்பவர்களால் உதவி செய்ய முடியாது. பள்ளியில் கற்றுக்கொள்வது மட்டுமே மாணவர்களுக்கு பயனளிக்கும். ஐந்து வருடத்திற்கு முன் எங்களது பள்ளியின் இயக்குனராக பொறுப்பேற்ற திருமதி. சசிகலா ஸ்ரீராம் மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலில் நிறைய மாற்றங்கள், புதுமைகள் செய்தார். அதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 98 ஆக உயர்ந்தது. தற்போதுள்ள பேரிடர் காலத்தில் எங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க முடியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எங்களது பள்ளியின் இயக்குனர் திருமதி. சசிகலா ஸ்ரீராம் காலமறிந்து செயலாற்றி எங்களது பள்ளியில் கல்விப்பணி சிறக்க வழிவகுத்தார். அவருடன் நல் உள்ளம் படைத்த பலரின் நன்கொடை மூலம் அவரது எண்ணத்தில் உதித்த கருத்து இன்று எங்கள் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் டேப்லெட் வழங்கப்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு பயனடைகின்றனர். உலக டிஜிட்டல் கல்வியறிவு ஆண்டில் பேரிடர் காலத்தில் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு எங்களுக்குள் ஒரு புது திறமையை வளர்த்த பெருமை அவரையே சாரும். வெள்ளத்தனையது மலர் நீட்டம் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப சிறந்த உதாரணமாய் திகழ்பவர் எங்கள் இயக்குனர் திருமதி. சசிகலா ஸ்ரீராம் அவர்களே என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.