Nivedhitha's 2020 Hero is the food vendor near her house

Nivedhitha says: "வெறும் 50 முதல் 200 நானோ மீட்டர் விட்டம் உடைய ஒரு வைரஸ் இன்று உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கூட கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேளை செய்ய நிர்பந்தித்துள்ளது. இப்படி உலகையே புரட்டி போட்டுள்ள கொரொனா என்னும் உயிர்க் கொல்லி நம் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை காண்போம். என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு முதியவர் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தார். கொரோனாவால் உண்டான முழு ஊரடங்கு காரணமாக அவரது வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர் இந்த ஒரு வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். நல்வாய்ப்பாக அவர் தான் சிறிது சேர்த்து வைத்து ஊரடங்கு காலக்கட்டத்தை அவர் சமாலித்ததாக அவர் எங்களிடம் தெரிவித்தார். கொரோனாவால் உண்டான முழு ஊரடங்காள் நம்முடைய அன்றாடம் செய்யும் ஆடம்பரச் செலவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகை ஆகாது. நமக்கு எது அத்யாவசியம் என்பதையும் சேமிப்பின் அத்யாவசியம் இந்த காலகட்டம் உணர்த்தி உள்ளது.